டில்லி

ந்திய அரசியலமைப்பு சட்டம் 370 ஆம் பிரிவு நீக்கத்துக்குப் பிறகு 34 வெளி மாநிலத்தவர்கள் சொத்துக்களை வாங்கி உள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்புச் சலுகை வகை செய்யும் 370-வது பிரிவு நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன பிறகு அங்கு புதிய நிலக் கொள்முதல் சட்டங்கள் அமலுக்குக் கொண்டு வரப்பட்டன.  மற்ற மாநிலங்களைப் போல் காஷ்மீரிலும்  வெளி மாநிலத்தவர்கள் சொத்து வாங்க உரிமை கிடைக்காது.

நேற்று மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பகுஜன் சமாஜ்கட்சி உறுப்பினர் ஹாஜி ஃபஸ்லுர்ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில் அமைச்சர்,

”கடந்த 2019 இல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு சலுகை அளிக்க வகையும் செய்யும் 370-வது பிரிவு 2 நீக்கப்பட்டது.  அதையொட்டி அங்கு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் சொத்துகளை வாங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இவ்வாறு 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இதுவரை 34 வெளிமாநிலத் தவர் சொத்துகளை வாங்கியுள்ளனர்.  இதை ஜம்மு-காஷ்மீர் யூனியன்பிரதேச நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சொத்துக்கள் ஜம்மு, ரியாசி, உதம்பூர், கந்தர்பால் மாவட்டங்களில் வாங்கப்பட்டுள்ளன”

எனக் கூறி உள்ளார்.