பெங்களூரு:
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. கடந்த சில வாரங்களாக இங்கு தேர்தல் களம் சூடுபிடித்திருந்தது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல்காந்தி, சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணி பிரச்சாரம் முடிவடைந்தது. 224 தொகுதிகளில பதிவாகும் வாக்குகள் 15ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஜெயநகர் தொகுதி தேர்தல் மட்டும் வேட்பாளர் மரணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.