பெங்களூரு
கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா பதவி நீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பாஜகவினர் கோஷ்டி கோஷ்டியாகப் பேட்டி அளித்தனர். நேற்று எடியூரப்பா அநேகமாக இன்று தாம் பதவி விலக உள்ளதாகச் சூசகமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் தனது ராஜினாமா முடிவை அறிவ்த்தா எடியூரப்பா பிற்பகல் ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்தார். அதன்படி சிறிது நேரம் முன்பு அவர் கர்நாடக ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆளுநர் அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் எடியூரப்பா, “நான் பதவி ஏற்கும் போதே 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன் என தெரிவித்திருந்தேன். . அதை இப்போது நிறைவேற்றி உள்ளேன். எனக்கு 2 ஆண்டுகள் முதல்வராகப் பணி புரிய வாய்ப்பளித்த அமித்ஷா, ஜே பி நட்டா, மற்றும் எனக்கு ஆதரவாக இருந்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.