டெல்லி: கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக, டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 1999ல் காஷ்மீரின் கார்கில் பகுதிக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊருடுவிய நிலையில், இந்திய ராணுவனத்தினருக்கும் பாகிஸ்தான் படையினருக்கும் இடையே போர் மூண்டது. ‘ஆபரேஷன் விஜய்’ என்ற பெயரில் சுமார் 3 மாதங்கள் நடைபெற்ற இநத் போரில், பாகிஸ்தான் கைப்பற்றிய கார்கில் பகுதிகளை கைப்பற்றி, இந்தியா வெற்றி பெற்றது. இதில்100க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களும் வீரமரணம் அடைந்து வெற்றியை பெற்றுத்தந்தனர். அவர்களை நினைவு கூறும்வகையில், இந்தியா வெற்றி பெற்ற நாளான ஜூலை 26 ‘கார்கில் விஜய் திவாஸ்’ என கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 23வது ஆண்டாக உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.

டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே, விமானப்படை தலைமை தளபதி வி.ஆர். சௌத்ரி மற்றும் கடற்படை தளபதி ஹரி குமார் ஆகிய மூன்று படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் ஆங்காங்கே கார்கில் விஜய் திவாஸ் கடைபிடிக்கப்படுகிறது.