டில்லி:

கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு ஜம்மு- காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவியது. அங்குள்ள மலைப்பகுதியை ஆக்கிரமித்ததால் அந்த நாட்டு ராணுவத்துடன் இந்திய ராணுவத்தினர் போரிட்டனர்.

சுமார் 60 தினங்கள் நடைபெற்ற இந்த போரில் கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி இந்தியா வெற்றி பெற்றது. எனினும் இந்த போரில் ஏராளமான இந்திய வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில் இந்திய வெற்றி பெற்ற தினம் இன்று. இதுகுறித்து,  பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதவில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில்,  நாட்டின் பெருமைக்காக கார்கில் போரின்போது மக்களின் பாதுகாப்புக்காக போராடிய நமது துணிச்சலான வீரர்கள் நினைவு கூர்வதாகவும், ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் தான் நாடு பாதுாகாப்பாக உள்ளது. என குறிப்பிட்டுள்ளார்.

அருண்ஜேட்லி மரியாதை

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர்  அருண் ஜேட்லி  அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தினார்.

 

போரில் உயிர்நீத்த வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும், வெற்றியை வீரர்களுக்கு சமர்ப்பிக்கும் வகையிலும் அவர்களுக்காக டெல்லியில் அமைக்கப்பட்ட நினைவு இடமான அமர்ஜவான் ஜோதியில் ஆண்டுதோறும் மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்த ஆண்டும் இந்த கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, முப்படை தளபதிகளுடன் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்தினார்.