சென்னை:

திருவொற்றியூர் அடுத்த கார்கில் நகரில் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு கட்டப்பட்டு வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  நேரில் ஆய்வு செய்து அறிக்கை தர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டிடம் கட்டுவது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து அறிக்கை தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக குடிசை மாற்று வாரியம் சார்பில்  திருவொற்றியூர் அருகே உள்ள  கார்கில் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு என்பது கட்டப்பட்டு வருகிறது. னைவருக்கும் வீடு திட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜானா திட்டத்தின் கீழ் 11 அடுக்குமாடி கொண்ட 1200 வீடுகளை திருவொற்றியூரில் உள்ள கார்கில் நகரில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை தமிழகஅரசு எடுத்து வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியில் உள்ள  அசோக் லேலண்ட் தொழிலாளர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்ட உள்ளது.  அவர்கள் தாக்கல் செய்த மனுவில்,  திருவொற்றியூர் தாலுகாவில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாகவும், கார்கில் நகரில் உள்ள ஏரி பகுதியின் மேற்கு பகுதியில் அடுக்குமாடி ககட்டப்படவுள்ளதாகவும், மழைக்காலங்களில் நீர்தேங்கும் ஏரியில் கட்டிடம் கட்டினால் அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கிவிடும், எனவே கட்டிடம் கட்ட தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுமீ தான விசாரணை நீதிபதி வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி சுரேஷ்குமார்  அமர்வில் விசாரிக்கப் பட்டது.  அதைத்தொடர்ந்து, குடிசை மாற்று வாரியம் வீடுகள் கட்டம் இடத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வரும்  26ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தனர்.