நாக் அஸ்வின் படத்தைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கும் ஸ்பிரிட் என்ற படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இது அவரது 25 வது படம்.

பூஷன் குமாரின் டி சீரிஸும், பத்ரகாளி பிக்சர்ஸும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன.

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஜாப்பனிஷ், கொரியன், சைனீஷ் ஆகிய எட்டு மொழிகளில் படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

பான் – இந்தியா திரைப்படம் என தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் படத்தை வெளியிடுகின்றனர். சிலர் இதனுடன் மலையாளம், கன்னடத்தைச் சேர்த்து ஐந்து மொழிகளில் வெளியிடுகின்றனர். பிரபாஸின் 25 வது படம் எட்டு மொழிகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், ‘ஸ்பிரிட்’ படத்தின் கதாநாயகி குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக படக்குழு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.