இந்தி நட்சத்திர ஜோடியான சயீப் அலிகான் – கரினா கபூர் தம்பதியருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே தைமூர் அலிகான் என்ற மகன் இருக்கிறான்.
இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த கரீனா கபூருக்கு கடந்த மாதம் 21 ஆம் தேதி மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஒரு மாதம் ஓய்வில் இருந்த கரீனா கபூர், மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மும்பை பந்த்ராவில் நடைபெற்ற ஷுட்டிங்கில் கலந்து கொண்ட அவரது போட்டோக்கள், அங்குள்ள வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
இதனை பார்த்து “இரண்டு குழந்தை பெற்ற மாதிரி தெரியவில்லையே” என சிலர் கமெண்ட் அடித்துள்ளனர்.
– பா. பாரதி
[youtube-feed feed=1]