நடிகர் கரண் மெஹ்ராவுக்கு டெல்லியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் அவரின் மனைவி பிரபல நடிகை நிஷா ராவல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வரும் கரண் மெஹ்ராவும், நடிகை நிஷா ராவலும் காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு அதில் கரண் மெஹ்ரா தன்னை தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டதாக நிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் கரணை கைது செய்தார்கள். பின்னர் கரண் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.