https://twitter.com/karanjohar/status/1189378755329839105

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள படம் பிகில் .ரிலீஸான சில மணிநேரத்திலேயே அது தமிழ் ராக்கர்ஸில் கசிந்துவிட்டது . 180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.

தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்கிரீன் சீன் நிறுவனம் சுமார் 83 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

விமர்சன ரீதியாகக் சற்றே தொய்வு இருந்தாலும், வசூல் ரீதியாகப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் பாலிவுட்டில் இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்ட கரண் ஜோஹர் பிகில் படம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

விஜய் டாப் ஃபார்மில் உள்ளார் என்றும் அட்லியை சூப்பர் ஸ்டார் இயக்குநர் என்று புகழ்ந்துள்ளார்.

[youtube-feed feed=1]