காரைக்குடி

காரைக்குடி ரோட்டரி சங்கம் திருநங்கைகளுக்கு ஒரு மாதத்துக்கான மளிகை பொருட்களை வழங்கி உள்ளது.

கொரொனா பரவுதலை கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு கடந்த மாதம் 24 முதல் அமலில் உள்ளது.  இது மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கபட்டுள்ள்ளது.   இதனால் ஆண், பெண் பேதமின்றி அனைவரும் பணிக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.    பணிக்குச் சென்றால்தான் ஊதியம் என்னும் நிலையில் உள்ள அனைவரும் இதனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இந்த பாதிப்பு திருநங்கைகளுக்கும் ஏற்பட்டுள்ளது.  பொதுவாக திருநங்கைகள் எந்த ஒரு அமைப்பின் கீழும் செயல்படுவது இல்லை.  இவர்கள் சிறு சிறுகுழுக்களாக இருந்து கிடைத்த வேலைகளை செய்து பிச்சை எடுத்தும் வாழ்க்கையை நடத்துகின்றனர்.  இவர்களுக்கு தற்போது வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளது.

இவர்களுக்குப் பல தன்னார்வலர்களும் சேவை அமைப்புக்களும் உதவி வருகின்றனர்.  காரைக்குடியில்  ஒரு பகுதியில் சுமார் 20 திருநங்கைகள் ஒரு குழுவாக வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு காரைக்குடி ரோட்ட்ரி சங்கத்தினர் ஒரு மாதத்துக்கான மளிகைப் பொருட்களை வழங்கி உள்ளனர்  இன்று நடந்த இந்த விழாவில் சமூக இடைவெளியை கடைபிடித்து உதவிகளைப் பெற்றுக் கொண்ட திருநங்கையர் உதவியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.