பாகிஸ்தான் வர்த்தக மைய கட்டடத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் போலீஸ் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் பங்கு பரிவர்த்தனை கட்டடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கட்டடத்த்தின் நுழைவுவாயிலின் அருகே திடீரென காரில் வந்த தீவிரவாதிகள் தூப்பாக்கியல் சுடத்தொடங்கினர் மேலும் கையெறி குண்டுகளை வீசி கட்டடத்தின் உள்ளே நுழைய முயன்றனர்.

இந்த தாக்குதலை எதிர்பாராத பாதுகாவலர்கள் சுதாரித்துக்கொண்டு பதில் தாக்குதல் நடத்த முயன்ற போது திவிரவாதிகளால் 4 பாதுகாவலர்கள் உட்பட 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளையும் சுட்டுக்கொண்டனர். இந்த சம்வத்தில் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

காரச்சியின் வர்த்தக மைய கட்டத்தில் நடைபெற்ற இந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பலுசிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]