புதுடெல்லி: பிரிட்டன் நாடாளுமன்றத்தை அந்நாட்டு பிரதமர் முடக்கியது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல், இந்திய நீதிமன்றங்களை மறைமுகமாக சாடியுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கியது சட்டவிரோதம் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உலகளவில் பரபரப்பை கிளப்பியது. உலகளவில் பல கலவையான கருத்துக்களைப் பெற்றுள்ளது இந்தத் தீர்ப்பு.

இந்திய மூத்த வழக்கறிஞரும், அரசியல்வாதியுமான கபில் சிபல் இந்தத் தீர்ப்பை ஏகமனதாக வரவேற்றுள்ளார். இந்த தீர்ப்பிலிருந்து இந்திய நீதிமன்றங்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென கூறியுள்ள அவர், இந்த தீர்ப்பின் மூலம் இந்திய மற்றும் பிரிட்டன் நீதிமன்றங்கள் செயல்படும் தன்மைகளின் மாபெரும் வேறுபாடுகள் தெரியவருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிதி மசோதாக்கள், சட்டத் திருத்தங்கள், எதிர்க்கட்சிகளை பலவித நடவடிக்கைகளின் மூலம் ஊமையாக்குதல் உள்ளிட்ட பல விஷயங்களில் நீதிமன்றங்கள் தங்களின் கடமையை செய்ய வேண்டுமென கூறியுள்ளார் அவர்.