கான்பூர்

ரும் ஜூன் மாதம் அடுத்த கொரோனா அலை தாக்குதல் ஏற்படலாம் என கான்பூர் ஐஐடி தெரிவித்துள்ளது.

 

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  இதனால் இந்தியாவில் மூன்றாம் அலை கொரோனா தாக்குதல் ஏற்பட்டது.   மத்திய மாநில அரசுகளின் கடும் உழைப்பாலும் கொரோனா தடுப்பூசியாலும் இதன் பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது.

விரைவில் கொரோனா நான்காம் அலை தாக்குதல் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.   அதற்கேற்ப கான்பூர் ஐஐடி ஆய்வாளர்கள், ”வரும் ஜூன் மாதம் 22 ஆம் தேதி இந்தியாவில் கோவிட் 4வது அலை பரவல் அக்டோபர் 24ந்தேதி வரை நீடிக்கும்.

புதிய கொரோனா வைரஸ்கள் மக்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப கடுமை குறைவாக இருக்கும்

இவ்வாறு ஜூன் மாதம் 4வது அலை பரவல் தோன்றினால், அது தொடர்ந்து  4 மாதங்கள் வரை இருக்கும்.  எனவே இந்த நான்காம் அலையானது ஆகஸ்டு 15ந்தேதி முதல் ஆகஸ்டு 31ந்தேதி வரை உச்சமடையும்.  அதற்குப் பிறகு குறையத் தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.