பெங்களூரு

ன்னட முன்னேற்றக் குழு என்னும் அமைப்பு பாஸ்போர்ட்டில் கன்னட மொழி இடம் பெற வேண்டும் என்னும் கோரிக்கை விடுத்துள்ளது.

கர்னாடகா மாநிலத்தில் இயங்கி வரும் அமைப்புக்களில் ஒன்று கன்னட முன்னேற்றக் குழு ஆகும்.   இந்தக் குழுவின் தலைவராக பேராசிரியர் சித்தராமையா பொறுப்பேற்றுள்ளார்.  அவர் பொறுப்பேற்றதில் இருந்தே கர்னாடகா மாநிலத்தில் பல இடங்களில் கன்னட மொழி உபயோகப்படுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகிறார்.

சமீபத்தில் பெங்களூருவில் உள்ள சர்வதேச விமான நிலைய அதிகாரிகளை சந்தித்து அனைத்து அறிவிப்புகளையும் கன்னட மொழியில் அறிவிக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.   அதைத் தொடர்ந்து தற்போது போர்டுகளில் வருகை மற்றும் புறப்பாடு உட்பட அனைத்து அறிவிப்புகளும் ஆங்கிலத்திலும் கன்னட மொழியிலும்  உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சித்தராமையா கர்னாடகா மாநிலத்தில் வழங்கப்படும் அனைத்து பாஸ்போர்ட்டுக்களிலும் அட்டையில் இருந்து கடைசி வரை உள்ள அனைத்து பக்கங்களிலும் கன்னட மொழி இடம் பெற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.  கடைசி பக்கத்தில் உள்ள பெயர் விலாசம் ஆகியவை ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசு தரப்பில், “பாஸ்போர்ட் என்பது வெளிநாடு செல்ல ஒரு அடையாள அட்டை ஆகும்.   பொதுவாக சர்வதேச அளவில் அவை பயன்படுத்தப் படும் போது அனைத்து நாடுகளிலும் ஆங்கில மொழியில் உள்ள விவரங்கள் மட்டுமே சரி பார்க்கப் படுகின்றன.   ஆங்கிலம் இந்தியாவின் உஅயோகப்படுத்தப் படும் மொழி என சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.   பிராந்திய மொழிகளில் பாஸ்போர்ட்டுகளில் விவரம் அச்சடிக்க தேவை இல்லை”  என கூறப்பட்டுள்ளது.

இதற்கு சித்தராமையா, “பல நாடுகளில் இது போல பிராந்திய மொழிகளில் பாஸ்போர்ட்டில் விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன.  இது அந்த மொழிக்கு தரப்பட்டுள்ள ஒரு அங்கீகாரம்.    நாங்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் பாஸ்போர்ட் அலுவலரை சந்தித்து இது குறித்து நேரில் வலியுறுத்த உள்ளோம்” என பதில் அளித்துள்ளார்.