கொரோனா நோயாளிக்கு அல்வாவுக்குள் கஞ்சா
கேரள மாநிலம் அனயாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ,அண்மையில் ஐதராபாத் சென்று விட்டு ஊர் திரும்பினார்.
கொரோனா பாதிப்பு இருக்கும் என்பதால் அவரை அடூரில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தி இருந்தனர்.
அவருக்கு உணவு கொண்டு வந்த நண்பர் விநோத் என்பவர் அல்வா பொட்டலம் ஒன்றையும் சேர்த்துக் கொடுத்தார்.
பொட்டலத்தைப் பிதுக்கிப் பார்த்த போது, உள்ளே ஏதோ வித்தியாசமாகத் தட்டுப்பட, நுகர்ந்து பார்த்துள்ளார், முகாமில் பணிபுரியும் ஊழியர்.
புகையிலை வாசம் வீசியது.
அடூர் போலீசுக்கு அவர் தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீஸ் ,அல்வாவைப் பிரித்து எடுத்துள்ளனர்.
உள்ளே கஞ்சா பொட்டலம்.
அதனைக் கைப்பற்றிய போலீசார் விநோத் வீட்டுக்குச் சென்றால், ஆள் மாயம்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அந்த முகாமில் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
-ஏழுமலை வெங்கடேசன்