சென்னை: கனியார் மூர் பள்ளி கலவரம் விவகாரம் தொடர்பான விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பெரும் கலவரம் நடைபெற்றது. அரசியல் கட்சியினர், சில அமைப்பினர், 2022ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, சில அமைப்புகள், அரசியல் கட்சிகள் அதை கலவரமாக மாற்றியது. இதையடுத்து கலவரக்காரர்கள், இதில் பள்ளி வளாகம் முழுவதும் தீ வைத்து எரித்து சேதமாக்கப்பட்டது. இதில் 50க்கும் பேற்பட்ட பள்ளி பேருந்துகள், உள்பட ஆவணங்களும் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் காவல்துறை பள்ளிக்கு துணையாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் பல்வேறு கட்ட வழக்குகளைத் தொடர்ந்து, பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கிடையில், கணியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக 2022ம் ஆண்டு ஆகஸ்டு 30ந்தேதி நடைபெற்ற உயர்நீதிமன்ற விசாரணையின்போது, சிறப்பு புலனாய்வு குழுவி விசாரணையை முடித்து இறுதி அறிக்கை விரைந்து தாக்கல் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியது. இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. இதை பாராட்டிய நீதிமனற்ம், புகார்தாரரே குற்றம் சாட்டப்பட்டவராக மாறுகின்ற சம்பவங்களை யும் இந்த நீதிமன்றம் தனது அனுபவத்தில் பார்த்துள்ளது என்றும், விசாரணை முடிவடையாத நிலையில் அது போன்ற கட்டத்தை இன்னும் விசாரணை குழு எட்டவில்லை என்றும் சுட்டிக்காட்டியதுடன், இடைக்கால அறிக்கையில், பல்வேறு சூழல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அவற்றை வெளியிட முடியாது என்றும், உத்தரவில் விளக்கம் அளித்து, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.
இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் விசாரணைஅறிக்கையை தாக்கல் செய்யவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கனியாமூர் பள்ளி விவகாரம்‘ மற்றும் கலவரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழுவு சாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.