ன்னியாகுமரி

மிழக ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதல்வர் கலந்து கொண்டது குறித்து கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்

நேற்று வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதிக்காக கன்னியாகுமரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒரு நாள் தேநீர் கடை ஒன்று திறந்து வைத்தது.  இந்த தேநீர் கடையில் திமுக எம் பி கனிமொழி அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட பலர் நிதி வழங்கி தேநீர் அருந்தினர்.

கனிமொழி அப்போது செய்தியாளர்களிடம்,

“அதிமுக செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடப்பட்டது. நல்ல மாற்றம் தான் ஆனால், இது காலம் கடந்த நிகழ்வு.

ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் கலந்துகொண்ட விவகாரத்தில், கட்சிக்கு சில விதிமுறைகள் இருக்கின்றன. அதுபோல் முதல்வருக்கு சில கடமைகள் உள்ளன. இதில் எந்த விதமான முரண்பாடுகளும் இல்லை.

திமுக பொறுத்தமட்டில் யாரும் கலந்துகொள்ளவில்லை அமைச்சரவையில் முக்கியமான அமைச்சர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

பாஜக தலைவராக இருப்பததால் தான் நாணய வெளியிட்டு விழாவில் அண்ணாமலை கலந்துகொள்கிறார். மத்திய அரசாங்கம் நாணயத்தை வெளியிடுகிறார்கள். மத்திய அமைச்சர்களும் நாணயத்தை வெளியிடுகிறார்கள் அதில் எப்படி தமிழ்நாடு பாஜகவினருக்கு மாற்று கருத்து இருக்கமுடியும்.”

என கனிமொழி எம்பி தெரிவித்தார்.

திமுக இந்தியா கூட்டணியை விட்டுவிட்டு பாஜகவுடன் மெல்ல மெல்ல போகிறதா என  பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு தாம் திமுகவில் தான் இருப்பதாகவும் அவருக்கு தெரிந்து அப்படி எந்த எண்ணமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.