கணினிப் பூக்கள்
கவிதைத் தொகுப்பு – பகுதி 7
பா. தேவிமயில் குமார்
எப்போது??????
காதலை சொன்னால்
கதை கூறுவது போல
கேட்கிறாய்!
விழிகளை திறந்த பின்
இதயத்தை தாழிட்டாய்!
உள் நாட்டில் அகதியை போல
உன்னுள் என் காதல்!
உதறலுடன்!
ஆகாயத்துடன்
போட்டியிடும்
அகல் விளக்காய்
என் காதல்!
கருந்துளையாக நீ இரு….
உன்னுள் காணாமல் போக நானே வருகிறேன்!
என் காதல்
உனக்காக
எட்டு திசையிலும்
ஏங்கி கிடக்கிறது! உனை..
தாங்கிடுவென் வா!
எப்படி காதலை
எடுத்து
சொன்னாலும்
புரியாத பிள்ளை போல
பார்ப்பது ஏன்?…
எத்தனை முறை
யோசித்தாலும்
உனக்கான காதல்
என்னிடம் மட்டுமே உள்ளது…..
வா,
பண்டமாற்றாக
காதலுக்கு
முத்தத்தை
மாற்றிக் கொள்வோம்!
ஆடி மாத வியாபாரமா
வாழ்க்கை?
இவ்வளவு
யோசிக்கிறாய்?
உனக்கு நான்
எனக்கு நீ
காதலுக்கு நாம்
அவ்வளவே!
எப்போது காதலிக்கலாம்?????