சென்னை,

2ஜி வழக்கில் விடுதலையான திமுக எம்.பி. கனிமொழி காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, அப்போது தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.

சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராஜா, கனிமொழி உள்பட 16 பேரும் விடுவிக்கப்படுவதாக சிபிஐ கோர்ட்டு நீதிபதி இன்று அறிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வந்த மன அழுத்தம் நீக்கி உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

அவருக்கு ராகுல்காந்தி உள்பட ஏராளமான அரசியல் தலைவர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்நிலையில்,காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.