சென்னை:
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தியின் இந்தியா ஒற்றுமை நடைப்பயணத்தில் திமுக எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார். 100 நாட்களை கடந்து ராகுல்காந்தி தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், அரியானாவில் அந்த மாநில முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங், மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங், குமாரி செல்ஜா உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். அதேபோல் ராகுல் காந்தியுடன் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கலந்துகொண்டு நடந்து சென்றார். காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் பங்கேற்பது குறித்து, திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த நூறு நாட்களுக்கும் மேலாக மேற்கொண்டு வரும் திரு. ராகுல் காந்தி அவர்களின் அழைப்பையேற்று நாளை திச-24 அன்று புது தில்லியில் அவருடன் நானும்தோழர் ரவிகுமார் அவர்களும் பங்கேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]