திருச்செந்தூர்:

தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர் கனிமொழி இன்று திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதியில் ஓட்டு வேட்டையாடி வருகிறார். அவரைக் காண ஏராளமான மக்கள் குவிந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் கோவை சுற்றி உள்ள  கீழரதவீதி தேரடி அருகில் ஓட்டுவேட்டையை தொடங்கி, நாலுமுலை கிணறு வழியாக  பரமன்குறிச்சி பஜார், அய்யனார்நகர், பவெள்ளாளன்விளை, வட்டன்விளை, குருநாதபுரம், சிறுடையார்புரம், வீரப்ப நாடார் குடியிருப்பு, கரிசன் விளை  பகுதிகளுக்கு திறந்த வேனில், அந்த பகுதி திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது மக்களிடையே பேசிய கனிமொழி, மத்திய மாநில அரசுகளால் தூத்துக்குடி மாவட்டத் தில் எந்த ஒரு புதிய திட்டங்களும் செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,  வேலை பார்ப்பவர்களுக்கும் பணி வாய்ப்பு இழந்தவர்களும் கல்வி தொழில் வளர்ச்சி பெண்கள் பாதுகாப்பில் தூத்துக்குடியை முன்னேற்ற செய்வோம் என்று உறுதி அளித்தார்.

மேலும், மோடி அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால்,    பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திண்டாடும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். எனவே நாடு முன்னேற்றம் அடைய மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி அமையவேண்டும் என்றவர்,  தூத்துக்குடி மாவட்டத்தை கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் முதன்மை மாவட்டமாக மாற்றவேண்டும்  உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து  மெஞ்ஞானபுரம், அணைத்தலை, பூலிக்குடி யிருப்பு, நங்கைமொழி, செட்டியப்பத்து, தேரியூர், வேப்பங்காடு அடைக்கலாபுரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார்.