புதுடெல்லி

இன்று அமைச்சர் தென்ன்னரசு மற்றும்கனிமொழி ஆகியோர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளனர்.

இன்று தமிழஜ நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி ஆகியோர்டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்தினர்.

அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில்,

“மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை விடுவிக்கக் கோரி மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

இன்று, தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி மற்றும் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருடன் இணைந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புதுடெல்லியில் நேரில் சந்தித்து, இத்திட்டத்திற்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்தினோம்”

என்று பதிவிட்டுள்ளார்.