பாஜகவை திணற வைக்கும் கன்னையா குமார் : பீகார் கள நிலவரம்

Must read

குசராய், பீகார்

பீகார் மாநிலம் பகுசராய் தொகுதியில் முன்னாள் மாணவர் சங்க தலைவர் கன்னையா குமாருக்கு பாஜக வேட்பாளரை விட ஆதரவு கூடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர் சங்க தலைவராக பதவி வகித்தவர் கன்னையா குமார். இவர் தற்போது பீகாரில் உள்ள பகுசராய் தொகுதி வேட்பாளராக கம்யூனிஸ்ட் கட்சியினரால் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் கிரிராஜ் சிங் என்பவரை களத்தில் இறக்கி உள்ளது. மற்றொரு வேட்பாளரான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் குறித்து இது வரை அறிவிக்கப்படவில்லை.

கன்னையாகுமார் தனது வீட்டுக்கு மிக அருகில் உள்ள தனது உறவினரின் இல்லத்தில் தனது அலுவலகத்தை அமைத்துள்ளார். அன்பளிப்பாக கிடைத்த ஒரு எல் இ டி தொலைக்காட்சி  மற்றும் ஐந்து கம்ப்யூட்டர்கள், ஒரு பெரிய மேஜை ஆகியவைகளுடன் உள்ள இவர் அலுவலகத்தின் சுவற்றில் தொகுதியின் வரைபடம் மட்டும் உள்ளது. இவர் பஞ்சாப் நண்பர் ஒருவரின் வாகனத்தை இரவல் பெற்று உபயோகித்து வருகிறார்.

கடந்த மாதம் நடந்த புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்த சி ஆர் பி எஃப் வீரரின் சடலத்துக்கு மரியாதை செய்த ஒரே அரசியல் தலைவர் கன்னையா குமார் என்பது குறிப்பிடத் தக்கது. அப்போதிருந்தே அவருக்கு மக்களிடையே செல்வாக்கு வளரத் தொடங்கி உள்ளது. அத்துடன் அவர் கடந்த 24 ஆம் தேதி அன்று கம்யூனிஸ்ட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் மேலும் ஆதரவு பெருகி உள்ளது.

இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் கிரிராஜ் சிங் சற்றே பின் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் கன்னையா குமார் மாணவர் தேர்தலில் நின்ற போதே முதலில் அதிகம் அதரவு இல்லாத நிலையில் தேர்தல் நெருங்கும் போது ஆதரவு அதிகரித்து அவர் வெற்றி பெற்றார்.  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இவருக்கு ஆதரவு அளிக்கும் என கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்க்கிறது..

 

More articles

Latest article