இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்த போது நிகழ்ந்த சம்பவங்களை விளக்கி, இந்தியில் அரசியல் சினிமா ஒன்று தயாராகிறது.
இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இந்த படத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார்.

ஆனால், இந்த படம், இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம் அல்ல.
நாவல் ஒன்றை தழுவி இந்த படத்தின் ‘ஸ்கிரிப்ட்’ உருவாக்கப்பட்டுள்ளது.
கங்கனாவே இந்த படத்தை தயாரிக்கிறார்.
திரைக்கதை- வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், சாய் கபீர்.
ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, மொரார்ஜி தேசாய் கேரக்டர்கள் படத்தில் இடம் பெறுகிறது.
இந்த வேடங்களில் பிரபல நட்சத்திரங்கள், நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ள கங்கனா “இன்றைய இந்தியாவின் சமூக- பொருளாதார நிலையை இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த படம் இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
– பா. பாரதி
[youtube-feed feed=1]