பர்மிங்காம்:
காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இருந்து கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது இடது முழங்கை காயத்தினால் கேன் வில்லியம்சன் பல மாதங்களாக அவதியுற்று வருகிறார். இதனால்தான் அவரது பேட்டிங் சரியாக அமையவில்லை. இந்நிலையில் எட்ஜ்பாஸ்டனில் நாளை தொடங்கும் 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கு எதிராக ஜூன் 18ம் தேதி நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் விளையாடுவார் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel