காஞ்சிபுரம்

டி மாதம் முன்னிட்டு பக்தர்களுக்கு அம்மன் கோவிலில் கூழ் வழங்குவதைத் தடை செய்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார்.

அம்மன் கோவில்களில் ஆடி மாத திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.  பக்தர்களுக்கு அம்மன் கோவிலில் கூழ் வழங்குவது வழக்கமாகும்.   தற்போது கொரோனா பரவல் காரணமாக மாநிலம் எங்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் காஞ்சிபுரம் ஆட்சியர் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளார்.

அதன்படி கொரோனா மூன்றாம் அலை பரவலைத் தடுக்க கோவில்களில் வழிபாடு மட்டும் செய்யலாம் எனவும் திருவிழாக்கள் மற்றும்  குடமுழுக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன எனவும் இதனால் அதிகம் கூட்டம் கூடாமல் சாமி தரிசனம் மட்டுமே செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும் உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ளது.

  • ஆடி மாதம் திருவிழாக்கள், கூழ் வார்த்தல் மேற்கொள்ளக் கூடாது.  பக்தர்கள் தரிசனம் செய்ய தடை இல்லை.
  • கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகக் கவசம் கட்டாயம் ஆகும்
  • கோவிலுக்குள் செல்லும்  முன் சானிடைசர் கொண்டு கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.
  • 100 சதுர மீட்டர் பரப்பளவு உள்ள கோவிலில் 20 நபர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை
  • பெரிய கோவில்களில் டோக்கன் முறைப்படி குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம் செய்யும் முறை பின்பற்ற வேண்டும்.
  • முக்கியமாகக் குறைந்த பட்சம் 6 அடி சமூக இடைவெளியை மக்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.