காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.  நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சியில்  தெற்குப் பகுதி – நகரத்திற்கு மையத்தில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் திருக்கோவில். இது 108  திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோவிலிலி  மூலவர்  வரதராஜப்  பொருமாள் மேற்குப் பார்த்த வண்ணம், நின்ற திருக்கோலத்தில் அருள் புரிந்து வருகிறார்..  பெருந்தேவி தாயார் கிழக்கு பார்த்த வண்ணம் எழுந்தருளி அருள்புரிந்து கொண்டுள்ளார்.

இந்த பழமையான கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.  73 அடி உயரும் 7 நிலைகளுடன் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த திருத்தேரில், இன்று அதிகாலை வரதராஜப் பெருமாள் எழுந்தருளினார்.

தேருக்கு முன்னாள்  பஜனை கோஷ்டிகள் பாடிவர, பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க  நகரின் முக்கிய வீதிகளில் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் வரதராஜ பெருமாள்.

இன்று தேர்த்திருவிழாவையொட்டி,  500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.