காஞ்சிபுரம்:
காஞ்சி ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் மாசி உத்ஸவ எட்டாம் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் மிகச் சிறப்பாக நடந்தேறும். இவற்றில் தேர்த்திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும் மிகச் சிறப்புடையது. நவராத்திரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த உற்சவம் ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன.
காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும், சரஸ்வதியும் சந்நிதிகொண்டிருக்கின்றனர். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால், அனைத்து அம்மன் ஆலயங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும். தல விருட்சமாக செண்பக மரம்உள்ளது. தல தீர்த்தமாக பஞ்ச கங்கை உள்ளது. இக்கோவில் 2000ஆண்டுகால பழமையானது. மாயைக்கு காரணமான பிரம்ம சக்தி காமாசி அம்மனே. முள்ளை முள்ளால் எடுப்பதுப்போல் மாயைக்கு காரணமான அவளே மாயையை அகற்றி ஞானத்தையும் அருள்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்நிலையில், காஞ்சி ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் மாசி உத்ஸவ எட்டாம் திருநாள் இன்று காலை பத்ர பீடம் வீதி உலா காக்ஷி (உத்ஸவ மூர்த்திக்கு மூலவர் அலங்காரம்) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்பாளை தரிசனம் செய்தனர்.