சென்னை
சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் காமராஜர் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் உள்நாட்டு விமான முனையம், சர்வதேச விமான முனையம் ஆகிய இரண்டு விமான நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, சர்வதேச விமான முனையத்துக்கு அறிஞர் அண்ணா பெயரும். உள்நாட்டு விமான முனையத்துக்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும் சூட்டப்பட்டன.
அப்போது தமிழ்நாட்டில் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதியின் கோரிகையை ஏற்று, இரு விமானநிலையங்களும், தமிழகத்தின் இரு பெரும் தலைவர்கள் பெயரை சூட்டி கவுரவம் செய்தார், வி.பி.சிங்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை விமானநிலையம் விரிவாக்கப்பட்டது.
புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு பணிகள் முடிந்து, இரு விமானநிலையங்களும் செயல்பட்டு வரும் நிலையில், உள்நாட்டு விமானநிலைய பெயர் பலகையில் காமராஜர் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
அதாவது காமராஜர் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சர்வதேச விமானநிலையத்தின் பெயர் அண்ணா சர்வதேச விமானநிலையம் என்றே அழைக்கப்படுகிறது
அதாவது அண்ணா பெயர்-அந்த விமானநிலையத்துக்கு வழக்கம் போல் நீடிக்கிறது.
உள்நாட்டு விமானநிலையத்தில் ,காமராஜர் பெயர் நீக்கப்பட்டிருப்பது, தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.