
சென்னை,
தமிழக சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், காமராஜர் பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதிமுகவை சேர்ந்த ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை, வரும் 15ந்தேதி காமராஜர் பிறந்த நாள் வருவதாகவும், அவரது வாழ்க்கை வரலாறு குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், காமராஜர் பெயரில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு விருது வழங்குவது குறித்து அரசு அறிவிக்கும் என்று பேரவையில் கூறினார்.
Patrikai.com official YouTube Channel