அதிமுகவில் ‘சசிகலா அணி’ மட்டுமே! சுப்பிரமணியசாமி அதிரடி பேட்டி

தூத்துக்குடி,

பாஜக மூத்த தலைவர் பொர்க்கி புகழ் சுப்பிரமணியன் சுவாமி தனிப்பட்ட முறையில் தூத்துக்குடி வந்துள்ளார்.

அங்கு செய்தியாளர்களின் கேள்விக்கு அவர்  பதில் அளித்தார். அப்போது, தமிழகத்தில் அதிமுகவில் ஒரே ஒரு அணி மட்டுமே உள்ளது. அது சசிகலா அணி மட்டுமே என்று அதிரடியாக கூறினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்ல என்றும், இதுகுறித்து முதல்வரை சந்திப்பேன் என்றும், ‘ தமிழக அரசியல் தலைவர்கள் இங்கே தான் புலி, தலைநர் டில்லி சென்றால் வெறும் பூனைக்குட்டிதான் என்று கூறினார்.

மேலும், தற்போது வெளியாகி உள்ள பான்மசாலா, குட்கா பற்றிய கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த சாமி, இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் இருப்பதால், பிறகு பார்க்கலாம் ‘ என்று பதில் அளித்தார்.

மேலும் ரஜினி பற்றிய கேள்விக்கு அவர் அரசியலுக்கு வந்தால்.. அவருக்குதான் ஆபத்து என்று கூறி பரபரப்பையும் ஏற்படுத்தினார்.


English Summary
aiadmk is only the Sasikala team! Subramanya Swami said