சென்னை

பூரண மதுவிலக்கு என பெண்களைக் கவர அடிக்கடி பூச்சாண்டி காட்ட வேண்டாம் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அமைப்பாளருமான கமலஹாசன் தற்போது பூரண மது விலக்கு பற்றி ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.   அந்த செய்தி அரசியல் உலகில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

கமலஹாசன், “மதுப் பழக்கத்தை உடனடியாக நிறுத்த உடம்பு ஒப்புக் கொள்ளாது.   இது ஒரு வகை வியாதிதான்,  ஆனால் உடம்பு விரும்பும் வியாதி.    ஒட்டு மொத்த குடிப்பழக்கம் உள்ளவர்களையும்  மதுவை விரும்பாதவர்களாக மாற்ற முடியாது.   அப்படி மாற்றினால் மதுவினால் நடப்பதை விட அதிகம் கொலைகளும் கொடுமைகளும் நடக்கும்.

மது அருந்துவதை குறைக்கலாம்.    ஆனால் முழுமையாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகம் தான்.   இதை எல்லாம் யோசிக்காமல் பெண்களைக் கவர்ந்து அவர்கள் ஓட்டுக்களை பெற பூரண மதுவிலக்கு என அடிக்கடி பூச்சாண்டி காட்ட வேண்டாம்”  என தன் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

[youtube-feed feed=1]