சென்னை
நாளை முதல் தொடங்க உள்ள சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து கமலஹாசன் டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார்.
நாளை முதல் சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்க உள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சி இந்த வருடம் சென்னை நந்தனம் அண்ணாசாலையில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தக பதிப்பாளர்கள் கழிவுடன் விற்பனை செய்ய உள்ளனர்.
இந்த வருடம் கொரோனா பாதிப்பை முன்னிட்டு பலத்த கட்டுப்பாட்டுடன் கண்காட்சி நடைபெற உள்ளது. இரு வரிசைகளுக்கும் இடையில் அதிக இடைவெளியுடன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாட்டு விதிகளுடன் கண்காட்சி நடைபெற உள்ளது.
இது குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தனது டிவிட்டரில்,
”சென்னை புத்தகக் காட்சி பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை நடைபெறுகிறது. 44 ஆண்டுகளாக நடக்கும் கலாச்சார நிகழ்வு. தமிழின் மாபெரும் அறிவியக்கத்தின் விஸ்வரூப தரிசனத்தை ஒரே இடத்தில் தரிசிப்பதற்கான வாய்ப்பு இது. பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுடன் அறிவமுதம் பருக வருக.”
எனப் பதிந்துள்ளார்.