சென்னை
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த 1992 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கர சேவகர்களால் இடிக்கப்பட்டது.
அதையொட்டி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமலஹாசன் தனது டிவிட்டரில்
“நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும் அழுத்தமான ஆதாரங்களையும் வழக்குத் தொடுத்தவர்கள் சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா? நீதி கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக்கூடாது.”
எனப் பதிந்துள்ளார்.