சென்னை

மிழக சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் மயிலாப்பூரில் போட்டியிடுகிறார்

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 2021 ஆம் வருடம்  தேர்தல் நடைபெற உள்ளது.

அனைத்துக் கட்சிகளும் இதற்காகத் தயாராகி வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஒரு தனியார் நிறுவனம் சர்வே நடத்தி உள்ளது.

அந்த சர்வேயில் சென்னையில் அக்கட்சிக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகத் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

இது குறித்து அதிகார பூர்வ தகவல் வெளிவரவில்லை.