டிகர் கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகள் தனி ரகம். கவிதைபோல தோன்றும்.. மிக உயர்ர்ர்ந்தி தமிழாய்வாளர் (!) என்று நினைக்க வைக்கும்.

ஆனால் அவரது தமிழ் ட்விட்டுகளில் நிறைய எழுத்துப்பிழைகள் இருப்பதும், சொற்கட்டு (!) தவறாக இருப்பதும் பலமுறை சமூகவலைதளங்களில், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனாலும் அவர் தனது வழக்கமான அதிரடி தமிழ் ட்விட்டுகளை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

இன்று அவர் ட்விட்டிய பொங்கல் வாழ்த்திலும் ஒரு பிழை.

இது குறித்து சமூகவலைதளங்களில் பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

அவர்களில் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அவர்களின் முகநூல் பதிவு:

“அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு.

ஆண்டவரு..டிவிட்டரில்…

உமது தமிழ் வளம்பெறவேண்டும் ஆண்டவரே.. விதைப்பது என்றாலே அதில் ‘இனி’ என்பதும் உள்ளடக்கமாவிடும். அப்புறம் வாழ்த்துகளா.. வாழ்த்துக்களா?

பொதுவாக நமக்கு தெரிந்து, பன்மை விவகாரத்தில், க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..

”நன்றிக்கள்” ஆண்டவரே!”