நெட்டிசன்:

பெருமாள்சாமி சுப்புராஜ் அவர்களின் முகநூல் பதிவு:

“நேற்றைக்கு கூட பாருங்கள் கமலை முதலில் ஆதரித்து பேசியது வைகோ (கோவையில்) ..

கமல் நன்றி சொன்னது, தம்மை இரண்டாவது ஆதரித்து பேசிய ஸ்டாலினுக்கு மட்டுமே . இதுவும் ஒரு பிக்பாஸ் அரசியல்தான், கற்றுக்கொள்ள வேண்டியது கடல் அளவு உள்ளது போல ?

ஒரு வேளை நான் இதை இப்படி எடுத்து கொள்கிறேன் , ஸ்டாலின் அதிமுகவுடன் எப்போதும் சமரசம் செய்து கொள்ளா நிலையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் , வைகோ அப்படி இல்லை பல இடங்களில் அதிமுகவிற்கு ஒத்த கருத்தை கொண்டுள்ளார் என்ற காரணமாக இருக்கலாம் அல்லது institution பலம் என்று வருகையில் ஸ்டாலின் போதும் வைகோவை பற்றி கவலை இல்லை தனியாக அவருக்கு அழைத்து நன்றி சொன்னாலே போதும் என்று கமல் நினைத்து இருக்கலாம் . அல்லது வேறு எதுவாக இருக்கும் காரணங்கள் … கேள்விகள் இங்கே பதிலை யார் வேண்டுமானாலும் சொல்லலாம் ..

எல்லாமே அரசியல் பாடங்கள்தான் ..!”