“பிக்பாஸ்” நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகவேண்டும்!: மன்சூர்  சொல்வது ஏன் தெரியுமா?

“உறுதிகொள்” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில் பேசிய நடிகர் மன்சூர்அலிகான், கமலஹாசனை  கமடுமையாக விமர்சித்தார்.

“சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியை  கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார்.  அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்கள் அந்த டி.வி.யால ஏதோ பிழைக்கிறாங்க. பிழைச்சுட்டுப் போகட்டும்.

ஆனால் கமல் மாதிரி பெரிய நடிகர்கள் இதில் கலந்துகொள்ளலாமா. அந்த நிகழ்ச்சியை இரவு ஒளிபரப்புகிறார்கள். இதனால் சினிமாவுக்கு வரும் கூட்டம் குறைந்துவிட்டது. மறுநாள் காலையும் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறார்கள். இதனால் காலைக்காட்சிக்கும் கூட்டம் வருவதில்லை.

இப்படி சினிமாவை அழிக்கிறார் கமல்.

இதேபோல கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு டி.வி. நிகழ்ச்சி நடத்தி அதனால் கமல் படத்தின் வசூல் பாதித்தால் என்ன ஆகும். ஆகவே கமல் இது குறித்து யோசிக்க வேண்டும்” என்றார் தடாலடியாக.


English Summary
Kamal should releive from the "Bigbas" show  mansur ali khan