திருச்சி:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டம் தற்போது ஆரம்பித்துள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கமல்ஹாசன் சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயில் மூலம் வந்தடைந்தார்.

திருச்சியில் உள்ள ஜி.கார்னர் மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன் என்று மேடையின் திரையில் பெரிதாக எழுதப்பட்டுள்ளது. ஆகவே இந்த பொதுக்கூட்டத்தில் காவிரி பிரச்சனை, ஸ்டெர்லைட் பிரச்சனை, நியூட்ரினோ பிரச்சனை குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.