
பிரபல நடிகை ஸ்ரீதேவி மரணத்திற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
துபாயில் நேற்று இரவு மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த வகையில் நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூன்றாம் பிறை படத்தின் பாடால் என் செவியில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை, கன்னி மயிலாக கண்ணியமான மனைவியாக பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்தது மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்.

இந்த மறைவு செய்தி தன்னை துன்பத்தில் ஆழ்த்துகிறது. பழைய நினைவுகள் நினைவுக்கு வருகிறது” என்று கமல் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]