சென்னை,

டந்த சில மாதங்களாக மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து டுவிட்டர்  மூலம் விமர்சித்து வரும் கமல் விரைவில் அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற விவசாயிகளின் கூட்டத்தில் கமல் பங்கேற்றார். இது அரசியல் கட்சியினரிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், அவரது பிறந்த நாளின்போது அரசியலில் குதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம்  எண்ணூர் கழிமுகத்தை உதாசினப்படுத்தினால் வட சென்னைக்கு ஆபத்து ஏற்படும் என்று நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்நது கடந்த மாதம்  28ந்தேதி அன்று எண்ணூர் பகுதிக்கு திடீரென சென்று விவரம் கேட்டறிந்தார்.  எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விவசாயிகளின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் சிறப்பு கூட்டத்தில் கமல் கலந்துகொண்டார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சிறப்புக் கூட்டம் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முத்தமிழ் அரங்கத்தில் இன்று நடைபெற்று வருகிறது.  இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி ஏற்கனவே கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டருந்தது.

இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் சென்னையில் பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல், பளீர் வெள்ளை உடையில் வந்து கலந்துகொண்டார்.

இது விவசாயிகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. கமல் இந்த கூட்டத்தில் என்ன சொல்லப் போகிறார் என்பதை தமிழகமே ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.