சென்னை

தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் கமல்ஹாசனுக்கே மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரபல நடிகர்களான கமலஹாசன், ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் அரசியல் பக்கம் கண் பதித்துள்ளனர்.  கமலஹாசன் கட்சி துவங்க ரசிகர்களிடையே நிதி தேவை என கோரிக்கை விடுத்துள்ளார்.  மற்ற இருவரும் இன்னும் கட்சி ஆரம்பிப்பது பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை.  நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சி சேனல்  தற்போது இந்த மூவருக்கு உள்ள மக்கள் ஆதரவு குறித்து கருத்துக் கணிப்பு ஒன்றை நிகழ்த்தி உள்ளது.

அந்த கருத்துக் கணிப்பின் முடிவின்படி நடிகர்கள் தனிக்கட்சி துவங்குவதை பலர் விரும்பவில்லை எனத் தெரிய வந்துள்ளது.  இதில் மக்கள் ஆதரவு கமலுக்கே அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. தங்கள் ஆதரவு என கமலுக்கு 42.4% பேரும், ரஜினிக்கு 32.8% பேரும், விஜய்க்கு 24.6% பேரும் மூவருக்கும் இல்லை என 0.2% பேரும் பதில் அளித்துள்ளனர்.

இவ்வாறு நியூஸ் 7 தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது.