சென்னை,
தனது பிறந்தநாளை முன்னிட்டு நற்பணி இயக்கத்தின ருக்கான புதிய மொபைல் செயலியை (app) அறிமுகம் செய்தார் நடிகர் கமல்ஹாசன்.
நடிகர் கமலின் பிறந்த நாளான இன்று சென்னை தி.நகரில் உள்ள ஜிஆர்டி ஹோட்டலில் தன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, பிறந்தநாள் சிறப்பாக, மக்கள் நலன் கருதி, புதிய செயலியை அறிமுகம் செய்தார்.
# thedi theerpom vaa
#maiam whistle
#virtuos cycles என்ற 3 ஹேஷ்டேக்-களை நடிகர் கமல்ஹாசன் அறிமுகம் செய்தார்
இதில் #theditheerpomvaa இதில் தேடி சென்று பிரச்சினைகளை தீர்ப்பது.
#maiamwhistle என்ற ஹேஷ்டேக் தீயநவை ஏற்படும்போது கருவியாக இது செயல்படும்.
#vituouscycle இ து வெளிப்படைத்தன்மைக்காக உருவாக்கப்பட்டது. ஆட்சியில் யார் இருந்தாலும் இந்த ‘ஆப்’ அவர்களுக்கு கடமையை நினைவூட்டும்.
மக்களுக்கும், அரசுக்கும் நடுவே உரையாடல் தொடரவும் உதவும். இப்போதே முழுமையாக சொன்னால் பிறர் காப்பியடிக்க வாய்ப்புள்ளது. இந்த ஆப் ஒரு தொலைதொடர்பு சாதனம் போன்றது. ஜனவரியில் ‘ஆப்’ முழு வீச்சில் தயாராகும் என நம்புகிறோம் என்றார் அவர்.
தீயவை நடக்கும் போது இந்த செயலி மூலம் குரல் கொடுக்க வேண்டும் என செயலிகளை அறிமுகம் செய்துள்ளதாகவும், அரசியலில் குதிக்க அயத்தமாகி வருவதாகவும் அப்போது கூறினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல், மொபைல் செயலிகள் குறித்து விளக்கினார்.
அப்போது, நல்லதை சரியாக மக்களுக்கு செய்யவேண்டும் என்பதற்காகவே அரசியல் – செயலி அறிமுகம் செய்துள்ள தாகவும, அக்கிரமங்களுக்கு எதிராக மக்களின் குரல் குறைய தொடங்கி விட்டதாக கருதுகிறேன் என்றும் கமல் கூறினார்.
#KH என பெயரிடப்பட்டு உள்ள, இந்த செயலி மூலம், யாருக்கெல்லாம் உதவி தேவை படுகிறதோ அவர்களை தேடி தேடி நல்லதை செய்வது தான் என கமல் தெரிவித்துள்ளார் .
அதில் குறிப்பாக #maiam whistle என்ற இணைப்பும் இந்த செயலியில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது .
அதாவது தீயவை நடக்கும் போது இது ஒரு கருவியாக இந்த செயலி செயல்படும் என்றும், விஷம் கலந்துவிட்ட தர்ம சக்கரத்தை காக்க வேண்டும் என்றும், இந்த விசிலை நீங்கள் அடிக்க வேண்டும், அதாவது தீயவை நடக்கிறது என்று தெரிந்தால்,உடனே விசில் அடியுங்கள் என்று தெரிவித்துள்ளார் .
நீங்கள் அடிக்கும் இந்த விசில் மூலமாகத்தான், நல்லது நடத்த முடியும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தான் இதனுடைய நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்
விசில் அடித்தால் என்ன நடக்கும்?
விசில் அடித்தால்,பேருந்து கூட நின்று விடும் அல்லவா…அதே போன்று தான் இந்த விசிலை அடிக்கும் போது தீயவை நடப்பதை உடனே நிறுத்தி விட்டு நல்லதை செய்யலாம் என்பதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தற்போது கட்சி தொடங்க ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.