க்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கும் முன்பே கடந்த 40 வருடமாக நற்பணி இயக்கம் நடத்திவரும் கமல்ஹாசன் அப்போதிலிருந்தே தானும் தந்து ரசிகர்களும் பிறந்த தினத்தன்று ரத்த தானம் தருவதை ஒரு மரபாக கடை பிடித்து வருகின்றனர். அதுபற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தி உள்ளனர்.


உலக ரத்த தான தின இன்று ஜூன் 14ம் கமல்ஹாசன் வெளியிடுள்ள மெசேஜில் ரசிகர்களின் ரத்த தானம் பற்றிய சிலிர்ப் பூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
‘கடந்த 40 ஆண்டுகளில் நம் நற்பணி அணியினர் 4 லட்சம் யூனிட் ரத்த தானம் செய்துள்ளனர். 4 லட்சம் உயிர்களை
காக்கும் முயற்சி அது. உங்கள் உதவி உயிர் காப்பதை கண்முன் காண்பீர்கள். உலக ரத்த தான தினமான இன்று ரத்த தானத்தின் தேவையை எடுத்துரைப்போம். நம் தானம் தொடர்வோம் உயிர் காப்போம்’ என கமல் தெரிவித்திருக்கிறார்.