டில்லி:

ந்து தீவிரவாதம் குறித்து தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் கமல்ஹாசன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்க கோரி, தேர்தல் ஆணையத்தில் பிரபல டில்லி வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று  அரவக்குறிச்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பேசும்போது, சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன் என்று பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கமலின் பேச்சுக்கு எதிர்ப்பபு தெரிவித்து இந்துமத அமைப்பினர் கமலுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், கமல் தனது இன்றைய பிரசாரத்தை ரத்து செய்தார். இந்தநிலையில், கமல்ஹாசன்  தேர்தல் விதிமுறைகளை மீறி  பேசியதாக வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்யாயா புகார் மனு அளித்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு குறைந்தது 5 நாட்கள் தேரிதல் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.