நடிகர் கமல்ஹாசன் தனியார் டி.வி., ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தில் அவர் கூறியதாவது :

 

நான் இப்போது புதிதாக அரசியல் பேச ஆரம்பிக்கவில்லை. மனதில் எதையும் வைத்துக் கொண்டு குறை கூறவில்லை. என் மனதில் சரி என்று பட்டதை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  பொது மக்களில் ஒருவன் என்ற முறையில் ,நாடு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதில் எனக்கும் அக்கறை உண்டு. கருத்து சொல்ல எல்லோரையும் போல எனக்கும் உரிமை உண்டு. அது பற்றி யார் விமர்சித்தாலும் கவலை இல்லை.  ஒருவேளை  ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன்.

 

நமது மக்கள் இப்போது நல்ல தலைவரை தேடவில்லை.  மாறாக நிபுணரை தேடுகிறார்கள். பொதுப் பணி துறை என்றால் பொறுப்பான ஒரு என்ஜினீயர்தான் அதற்கு தலைமை ஏற்க வேண்டும். சுகாதார துறை என்றால் ஒரு சிறந்த மருத்துவர் தான் அந்த துறைக்கு பொறுப்பு உடையவராக இருக்க வேண்டும். எனது விமர்சனம் பொதுவானது.  அதே போல என்னைப் பொருத்த வரை நான் ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரி தொடங்கினால் அது சிறப்பாக இருக்கும் ஏனென்றால் எனக்கு நடிப்பு பற்றி நன்றாகத் தெரியும்”. எனக் கூறினார்.