திருவனந்தபுரம்
கமல் ஹாசன், கேரள முதல்வர் பினராயி விஜயனை அவரது வீட்டில் சந்தித்தார்.
கமல்ஹாசனின் டிவிட்டர் பதிவுகள் பெரும் அரசியல் அலையை உருவாக்கி வருவது தெரிந்ததே. அவர் நாட்டில் ஊழல் அதிகரித்து வருகிறது என தெரிவித்தார். அதற்கு ஆளும் கட்சியினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதே போல் முரசொலி பவள விழா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டதும் விமர்சிக்கப்பட்டது.
நேற்று இரவு கேரளா சென்ற அவர், இன்று காலை கேரளா முதல்வர் பினராயி விஜயனை அவர் இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசி உள்ளார். இன்று பினராயி விஜயன் வீட்டில் மதிய உணவை சாப்பிட்டுள்ளார். இதுவும் ஏதோ அரசியல் நோக்கத்துடன் நடந்ததா என பலரும் சந்தேகத்தில் ஆழ்ந்துள்ளனர். சந்திப்பில் இருவரும் அரசியல் குறித்து உரையாடினார்களா என்பது இன்னும் தெரியவில்லை. கமல் தனது டிவிட்டரில் பல இடது சாரி கருத்துக்கள் தெரிவித்து வருவதும், அவர் நடித்த பல படங்களிலும் அது போன்ற வசனங்கள் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.