நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் இணைந்து நடித்த படம் தேவர் மகன். இப்படம் திரைக்கு வந்து வெள்ளிவிழா கண்டது. ஆனால் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை 7 நாட்களில் எழுதியதாக கமல் கூறி உள்ளார்
.
இதுபற்றி அவர் கூறும்போது.’தேவர்மகன் படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதும்போது எனக்கு அழுத்தம் தரப்பட்டது. இப்படத்துக்கு 7 நாளில் ஸ்கிரிப்ட் எழுதி தராவிட்டால் படத்தை விட்டு விலகி விடுவேன் என்று ஒரு அழுத்தம் வந்தது. அது என்னை வேகமாக எழுத வைத்தது. சில படங்களுக்கு மாதக் கணக்கில் ஸ்கிரிப்ட் பணி நடக்கும். இன்னும் சில படங்களுக்கு வருட கணக்கில் ஆகும். பெட்டி நிறைய பணம் கொடுத்தாலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஸ்கிரிப்ட் எழுதி முடிக்க முடியாது, அதையெல்லாம்தாண்டி தேவர்மகன் ஸ்கிரிப்ட் ஏழு நாட்களில் எழுதி முடித்தேன்’என்றார் கமல்.
ஏ.ஆர்.ரஹ்மானுடன் நடந்த உரையாடலின் போது இந்த சம்பவத்தை கமல் பகிர்ந்து கொண்டார்.