
திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தில் கெளரவ உறுப்பினராக இணைந்துள்ளார் கமல். திரையிசைக் கலைஞர்கள் சங்கத்தில் தலைவராக இருப்பவர் இசையமைப்பாளர் தினா.
சுமார் 1500 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கத்தில் நடிகர் கமல் ஹாசனுக்கு கெளரவ உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
நடிப்பதோடு நிறுத்தி விடாமல், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் கமல்.
இந்நிலையில் கமல் ஹாசனின் அலுவலகத்துக்கு தினாவும், சேர்மன் எஸ்.ஏ.ராஜ்குமாரும் நேரில் சென்று கமல் ஹாசனிடம் கெளரவ உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார்கள்.
Patrikai.com official YouTube Channel